வெலிக்கடை, மாதின்னாகொட பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மதுபான தயாரிப்பு நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நேற்று (26) மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றி வளைப்பின்போது 6,000 மில்லி லீற்றர் மதுபானம், 800,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் மதுபானம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெரல்கள் தகரங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெலிக்கடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றுவளைப்பின்போது ராஜகிரியவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (27) புதியகடை 4ஆம் இல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
0 Comments