மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.வீதியோரமாக சென்ற இரண்டு வயோதிப பெண்கள் மீது நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளொன்று மோதியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
சம்பவ இடத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், காயமடைந்த மற்றைய பெண்ணும், மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.விபத்து தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments