யாழ்ப்பாணம், புத்தூர் சந்தியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பாரதி வீதி அச்சுவேலியைச் சேர்ந்த கந்தசாமி ரனோஜன் ( வயது 19 ) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த ப.பத்மசீலன் (வயது 26) , யோ. பிறேம் (வயது 26) , அச்சுவேலியைச் சேர்ந்த செ. ஜெயக்குமார் ( வயது 32) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
![]() ![]() ![]() ![]() |
0 Comments