எவருக்கும் அறிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மகனொருவர் இரு வருடங்கள் கழித்து வீடு திரும்பியபோது தனது கல்லறைக்கு தனது பெற்றோர் பூங்கொத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது.
சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி (38 வயது) என்ற மேற்படி நபர் 2011 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இந் நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்பிய ஜரோஸ்லாவ் தனது கல்லறைக்கு பெற்றோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துவதைக் அவதானித்துள்ளார்.
இந்நிலையில் தனது கல்லறையில் ஏறிய ஜரோஸ்லாவ் 'ஹலோ அம்மா, அப்பா, நான் திரும்பி வந்துவிட்டேன்" எனத் தெரிவிக்கவும் அதிர்ச்சிக்குள்ளாகிய அவரது தாயார் மயங்கி விழுந்துள்ளார்.
உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள காட்டில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தமது மகனுடையது என பெற்றோர் தவறுதலாக கருதியே குறித்த கல்லறையில் அதனை நல்லடக்கம் செய்திருந்தனர்.

மகன் உயிருடன் திரும்பியதால் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மகன் எதற்காக வீட்டைவிட்டு வெளியேறினார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் புதைக்கப்பட்ட சடலம் யாருடையது என கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments