மல்லாவியில் இருந்து பனங்காமம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, விபத்துக்குள்ளானதில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முற்பகல் 11 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தின் டயரொன்று வெடித்ததில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பாதையின் அருகே உள்ள மரத்தில் பேருந்து மோதியது. இவ்விபத்தில் சாரதி உட்பட இருபதுக்கு மேற்பட்டோர் காயமடைந்து, கிளிநொச்சி மற்றும் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
|
![]() |
0 Comments