அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் நாஸிக் அஹமட் எனும் சிறுவனே நேற்று புதன்கிமை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குறித்த சிறுவன் அவனது உறவினர் வீடுகளுக்கு சென்று அவர்கள் கொடுத்த பெருநாள் காசை எடுத்துக்கொண்டு தாயிடம் ஐந்நூறைக் கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த தாய் சிறுவனை ஏசியதையடுத்தே அந்தச் சிறுவன் வீட்டின் பின் புறத்தில் நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
0 Comments