மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் தமிழ் கிராமத்தின் சுவிஸ் தமிழ் பாலர் பாடசாலை விளையாட்டு விழா செவ்வாய்கிழமை மாலை கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் ந.சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், திராய்மடு இராணுவ அதிகாரி பி.ஹேரத், மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவிராஜா, ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இங்கு பானம் அருந்துதல், வடிவங்கள் தெரிதல், நிறக்கொடி தெரிதல், சோடி சேர்த்தல், பழம் பொறுக்குதல், பூ கோர்த்தல், நீர் நிறப்புதல், சொற்கள் தெரிதல், மண் நிரப்புதல், எண்கள் தெரிதல், பழைய மாணவருக்கான நேரோட்டம், பெற்றோருக்கான பலூன் ஊதல், மத்தியஸ்தர்களுக்கான விளையாட்டு என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றது.
|
இதன்போது இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
![]() ![]() ![]() ![]() |
0 Comments