Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் காமன்வெல்த் மாநாடு - முடிவு குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.


காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை அடுத்த மாதம் இலங்கையில் நடத்துவதற்கான முடிவை எடுத்ததில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் பயந்து, பணிவாகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்திருக்கிறார்கள். இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் பிரிட்டிஷ் அமைச்சர்கள் மிகவும் திடமான கொள்கை நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்று பிரிட்டனின் வெளிவிவகாரக் குழு கூறியுள்ளது.

  
2013 ஆம் ஆண்டு மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பில் காமன்வெல்த் சமூகத்தில் கருத்துப் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறியுள்ளதாக பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தது முதல், அங்கு செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் எதிரணிக் குழுக்கள் இலங்கை அரசாங்கத்தால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுவதாக விமர்சிக்கப்படுகின்றது.

ஆகவே இலங்கையில் நவம்பர் 15ஆம் திகதி காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கான முடிவை எடுப்பதற்கு முன்னதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலகம் கடுமையாக அதனை ஆராய்ந்திருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்புகிறார்கள். கோர்டன் பிரவுண் பிரதமராக இருந்த வேளையில் பணியாற்றிய அமைச்சர்கள் இந்த முடிவை எடுப்பது தொடர்பில் மிகவும் பயத்துடனும், பணிவுடனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இந்த விடயத்தில் ஒரு திடமான கொள்கை நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையின் நடத்தையில் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான உறுதிமொழியை வலியுறுத்த வேண்டும் என்கிறார் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கீழவையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவரான ரிச்சர்ட் ஒட்டாவே . தான் இந்த மாநாட்டை பகிஸ்கரிக்கப்போவதாக கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கடந்த மாதம் அறிவித்திருக்கிறார்.

அத்துடன் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டை அடுத்து இரு வருடங்களுக்கு அமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கைக்கு வழங்குவதை அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் நிராகரிக்க வேண்டும் என்று மனித உரிமைக் குழுவான ஹியூமன் ரைட்ஸ் வாட்ஜ் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments