Advertisement

Responsive Advertisement

15 ஆம் திகதி பாடசாலைகள் இயங்காது - வெளியான அறிவிப்பு

 


எதிர்வரும் 15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்றைய நாளில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு

15 ஆம் திகதி பாடசாலைகள் இயங்காது - வெளியான அறிவிப்பு | 15Th Strike Will Be No Educational Activities

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதனால் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, அன்றைய தினம் பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுப்படுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் நேற்று(12) தெரிவித்திருந்தார்.

மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இதில் நீர்வழங்கல், மின்சார விநியோகம், வைத்திய துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments