Advertisement

Responsive Advertisement

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு!


 8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 15ஆம் திகதி புதன்கிழமை  ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது.

அதற்கமைவாக எதிர்வரும் புதன்கிழமை அனைத்து அரச தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம் என்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக  கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட பலரும் குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

8 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், தனியார் ஆசிரியர்கள், துணைப் பாடசாலை ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச கல்வி அலுவலகங்கள் மட்டத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது. 

Post a Comment

0 Comments