(படுவான் பாலகன் ) கொக்கட்டிச்சோலை காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட நாற்பதுவட்டை கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி ஓடை குளத்தல் மூழ்கி மூன்று மாணவர்களும் ஓர் ஆசிரியரும் பலியான சம்பவம் இன்று(12) ஞயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
களுமுந்தன்வெளி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் 11மாணவர்களும், ஆசிரியர்கள் மூவரும் தாந்தாமலை பகுதிக்கு சென்று இருந்த நிலையில், மூன்று மாணவர்கள் குறித்த குளத்தில் தோணியில் பயணம் செய்துள்ளனர். குறித்த தோணியானது நீரில் கவிழ்ந்த நிலையில் அதில் பயணித்த மாணவர்கள் மூவரும் நீரில் வீழ்ந்து மூழ்கி உள்ளனர். குறித்த மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஆசிரியரும் நீரில் மூழ்கி உள்ளார்.
நீரில் மூழ்கிய மூன்று மாணவர்களும், ஓர் ஆசிரியரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: