விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடையில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆகவே வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கு இறக்குமதியைத் தடுக்கும் வேலைத் திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
தடைக்கு பதிலாக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: