Home »
எமது பகுதிச் செய்திகள்
» சாரதி மாரடைப்பில் மரணம் : வர்த்தக நிலையத்துடன் மோதி பேருந்து விபத்து!
சாரதி மாரடைப்பில் மரணம் : வர்த்தக நிலையத்துடன் மோதி பேருந்து விபத்து!
ஹிங்குராக்கொட – மின்னேரிய வீதியில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்
இன்று (13) காலை குறித்த சாரதி, தமது பேருந்தை செலுத்திக்கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
மாரடைப்பு ஏற்பட்டதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த வர்த்த நிலையம் ஒன்றின் மீது மோதியது.
எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வர்த்தக நிலையமொன்றின் மீது மோதியமை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
பேருந்து தரிப்பிடத்திலிருந்து, சுமார் 4 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த மறுகனமே, இந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும், அவர்கள் வேறு பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: