அஸ்ஹர் இப்றாஹிம்இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும் போதனாசிரியராகவும் இருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம்.உதுமாலெவ்வை (31.12.2022 )ஓய்வு பெற்றார்.இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையில் 1997ம் ஆண்டு மின்னியலாளர் போதனாசிரியராக நியமனம் பெற்று அம்பாரை மாவட்டத்தில் கல்முனை (நற்பிட்டிமுனை) தொழிற் பயிற்சி நிலையத்தில் கடமையேற்று 1999ம் ஆண்டு வரை சேவையாற்றிய பின்னர் நிந்தவூர் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தில் களஞ்சியப் பொறுப்பாளராகவும், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தராகவும் 2013ம் வரை சேவையாற்றி பின்னர் கொழும்பு தலைமை காரியாலயத்திற்கு மாற்றம் பெற்று சேவையாற்றி மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை மற்றும் ஆரையம்பதி, கிரான்குளம் தொழிற் பயிற்சி நிலையங்களிலும் சேவையாற்றினார்.2018ம் ஆண்டு தொடக்கம் 31.12.2022வரை சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும்,மின்னியல் போதனாசிரியராகவும் சேவையாற்றி ஓய்வு நிலையை அடைந்துள்ளார்.சமூகப் பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் சாய்ந்தமருதூரில் பல பொது அமைப்புக்களில் உறுப்பினராக செயற்படுவதுடன் மக்களின் நன்மதிப்பை பெற்றவராவர்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» ஒரு தமிழ் ஆசிரியர் உயிரை மாய்த்துக் கொள்ள முன் வெளியிட்ட மனதை உலுக்கும் ஓடியோ!
ஒரு தமிழ் ஆசிரியர் உயிரை மாய்த்துக் கொள்ள முன் வெளியிட்ட மனதை உலுக்கும் ஓடியோ!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: