ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவன் எதிர்வரும் 23ஆம் திகதி கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (7) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவனான மனாப்தீன் அப்துர் ரஹ்மான் (வயது 20) என்பவர் நேற்று காலை குடும்ப சகிதம் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது குறித்த மாணவர் தன் சகோதரருடன் குளித்துக்கொண்டிருந்த போது பாரிய அலையினால் இருவரும் அள்ளுண்டு சென்றுள்ளனர். பின் மற்றுமொரு அலையினில் இருவரும் கரைக்கு வந்தபோது குறித்த மாணவர் உயிரிழந்திருந்தார்.
அத்துடன் அவரது சகோதரர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments: