Home » » கிழக்கிலங்கையின் புகழ்பூத்த கணித மேதை கணபதிப்பிள்ளை ராதாக்கிஸ்னன் அவர்கள் 37 வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெறுகின்றார்

கிழக்கிலங்கையின் புகழ்பூத்த கணித மேதை கணபதிப்பிள்ளை ராதாக்கிஸ்னன் அவர்கள் 37 வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெறுகின்றார்




மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்பில் பல பொறியியலாளர்களையும் பல பட்டதாரிளையும் பல உயர் நிலை அதிகாரிகளையும்  உருவாக்கியவர் தான் ராதாகிஸ்னன் ஆசிரியர் அவர்கள். இவர் கணபதிப்பிள்ளை பூமணி தம்பதியினருக்கு மூத்த மகனாக 1963.01.08 ம் திகதி அவதரித்தார். இவரின் தந்தையயாரும் ஒரு புகழ்பெற்ற கணித ஆசிரியராவார். மட்டக்களப்பில் மாத்திரமல்ல இலங்யையில் பல பாகங்களிலும் இவரை "ராதா" சேர் என்றுதான் அழைப்பார்கள். இன்று உயர்பதவிகளில் வகிக்கின்றவர்கள் அனைவரும் இவரிடம் கல்விகற்ற அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு பெண் சகோதரிகளும் உண்டு.

ராதாக்கிஸ்னனின் தந்தை கணிதத்துறையில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்ந்தார். ராதா ஆசிரியர்  தரம் - 1 தொடக்கம் தரம் 13 வரை மட்/மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரியில்  கல்வியினைக் கற்றார். அக்காலப்பகுதியில் ஆரம்ப வகுப்புத் தொடக்கம் மிகத் திறமையான கற்றலை மேற்கொண்டிருந்த படியினால் இருதடவை மேல் வகுப்பிற்கு வகுப்பேற்றம் செய்யப்பட்டார் (Double Promotion) இதன் மூலமாக இவரது திறமையை அறியமுடிகின்றது.


   தனது தந்தையைப் போலவே தனயனும் கணிதத்துறையில் புலமையை வெளிப்படுத்தியிருந்தமையினால்  ”புலிக்குப் பிறந்தது பூனையாகுமா” எனும் சான்றோர்களின் முதுமொழியினை இவர் மெய்ப்படுத்தியிருந்தார். 1980 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் மூன்று A தரச் சித்திகளையும் ஒரு W தரத்தைச் சித்தியை இரசாயனவியல் பாடத்திலும் பெற்றிருந்தபடியினால் பொறியியல் துறைக்கு தெரிவவாவதில் இருந்து விலக்கப்பட்டார். இருந்தாலும் இவருக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பௌதீகத்துறையில் விஞ்ஞானப்பட்டப்படிப்பை தொடர வாய்ப்புக் கிடைத்தது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இவர் அங்கும் தனது அதீத திறமையினை வெளிப்படுத்தியிருந்தார். 1980 காலப்பகுதிகளிலே பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி மட்டக்களப்பில் இன்று வரை 43 வருடங்கள் உயர்தர கணிதத்துறையில் தனக்கென ஒரு தனியிடத்தை எவரும் எட்டாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளார்.  இதன் மூலமாக பல பொறியியலாளர்களையும் பல பட்டதாரிகளையும் பல உயர்நிலைப் பதவி அதிகாரிகளாகவும் திகழ  வழிசமைத்தார். கற்பிக்கும் பொழுது இறுக்கமானவராகவும் ஏனைய நேரங்களில் அன்பானவராகவும் நண்பனாகவும் எளிமையான தன்மை கொண்டவராகவும்  இவர் திகழ்ந்தார். வயது வேறுபாடின்றி இவர் எல்லோரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர்.

       1981 - 1984 காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர் அதீத திறமைகளை வெளிப்படுத்தி Bsc (Hons) பட்டத்தை பெற்றுக் கொண்டார். 2nd   Lower class தரத்தில் சித்தியடைந்திருந்தாலும் பல்கலைக்கழகத்தில் மேல் நிலையில் வருவதற்கு இவரின் திறமையால்  ஏற்பட்ட முரண்பாடுகள் தடையாக அமைந்திருந்தன.

     1984 ல் முதல் நியமனத்தை மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில்  ஆசிரியராகக் கடமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அதன் பிற்பாடு மட்/ வந்தாறுமூலை மகா வித்தியாலயத்திலும் இணைந்த கணித ஆசிரியராக கடமையாற்றியிருந்தார். அக்காலப்பகுதியில் பல பொறியியலாளர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். அதன் பின் மட்/ சிசிலியா பெண்ள் உயர்தர பாடசாலையில் 26 வருடங்கள் சேவையாற்றி பல பொறியியலாளர்களையும் பட்டதாரிகளையும் உருவாகக்கியமை குறிப்பிடத்தக்கது. அதன் பின் 2017ம் ஆண்டு மட்/சிவாநந்த வித்தியாலயம், தேசிய பாடசாலையில் இணைந்த கணித ஆசிரியராக 5 வருடங்கள் கடமையாற்றி பல பொறியியலாளர்களை உருவாக்கி 08.01.2023 ம் திகதியிடன் 37 வருட ஆசிரியப்பணியில் இருந்து  ஓய்வு பெறுகின்றார்.

கிழக்குமாகாணத்தில் பிரத்தியேக கற்பித்தலிலும் கணிதசமான பொறுயியலாளர்களையும் பல பட்டதாரிகளையும் பலர் உயர் நிலையில் அதிகாரிகளாக வருவும் ராதா கிருஸ்ணன் சேர் அவர்கள் காரணமாக இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இவர் இணைப்பாட விதானச் செயற்பாட்டிலும் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். உதைபத்து, குறுந்தூர ஓட்டம் என்பனவற்றிலும் தினது திறமைகளை அந்த நாளில் வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் கணித அறிவுப் போட்டிகளில் அகில இலகங்கை ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனைபடைக்க காரணமாக இருந்தார். 1980 முதல் இன்றுவரை பிரத்தியேக வகுப்பின் மூலமாக பல பொறியலாளர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். அத்தகைய ஒரு கணித மாமேதையை இன்று கிழக்கிலங்கை இழந்து நிற்கின்றது இவரின் இடைவெளியை யாராலும் நிரப்ப முடியாது என்பது வெளிப்படை உண்மையே. இத்தகைய ஒரு கணித்துறையில் சாதனைபடைத்த கல்வி மானை நீரூழி வாழ வாழ்த்தி இவரது சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவாராக என வேண்டி நின்கிறோம்.

ஆக்கம்:
பு.லோசிதரன் ஆசிரியர்,
மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலை.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |