அஸ்ஹர் இப்றாஹிம்
எதிர்காலத்தில் மாத்தளை பிரதேசத்தில் உதைபந்தாட்ட துறையினை மேலும் அதிகரிக்கும் வகையில் மாத்தளை யுனைடெட் உதைபந்தாட்ட அகடமி மற்றும் இந்தியா , கர்நாடகா கிக்ஸ்டாட் உதைபந்தாட்டக் கழகம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு நட்பு அடிப்படையில் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய இலங்கை மாணவர் குழுவிற்கு இரண்டு வாரங்களுக்கு இந்தியா , கர்நாடகாவில் உதைபந்தாட்ட பயிற்சினை வழங்கி இந்தியாவிலுள்ள சமவயது பாடசாலை மாணவர் உதைபந்தாட்ட குழுக்களுடன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதைபந்தாட்ட பயிற்சியிலும் சுற்றுப்போட்டித் தொடரில் பங்கேற்கும் மாத்தளை யுனைடெட்
உதைபந்தாட்ட அகடமி மாணவர்கள் அண்மையில் இந்தியா பயணமானார்கள்.
0 comments: