அஸ்ஹர் இப்றாஹிம்
மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு பின் புறமாக வாவியோரமாக தினசரி குப்பைகள் போடப்படுவதனால் வாவி அசுத்தமடைவதுடன் துர்நாற்றமும் வீச ஆரம்பித்துள்ளது.
நாளாந்தம் சேரும் குப்பைகளுடன் வெற்று சாராயப் போத்தல்கள் மற்றும் வெற்று பியர் டின்கள் என்பனவும் காணப்படுகின்றன.
இவற்றுள் நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்களும் காணப்படுவதால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துக்களும் ஏற்படலாம் என்ற அச்சமும் பிரயாணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு பயணிகள் கேட்டுள்ளனர்.
0 comments: