அஸ்ஹர் இப்றாஹிம்
அனுராதபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மட்ட நடனப் போட்டி நிகழ்வுகள் மூன்றில் பங்குபற்றி மூன்றிலும் முதலாம் இடத்தினைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டம் , பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
மாணவர்களை பயிற்று வித்த நடன ஆசிரியர்களான திருமதி.மதி தேவகுமார், திருமதி சுஜீவா விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலைச் சமூகத்திற்கும் பாடசாலை அதிபர் , ஆசிரியர் , மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் , ஊழியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்வி சமூகம் வாழ்த்துளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
0 comments: