Advertisement

Responsive Advertisement

குருக்கள்மடம் கிராமத்தில் ஏசியன் விளையாட்டு கழகம் நடாத்திய மின்னொளி கரப்பாந்தாட்ட சமரில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடம்

 


 குருக்கள்மடம் கிராமத்தில் ஏசியன் விளையாட்டு கழகம் நடாத்திய மின்னொளி  கரப்பாந்தாட்ட சமரில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடத்தை பெற்று வெற்றிவாகை சூடியது. 



இப்போட்டியில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் மற்றும் மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு கழகம் என்பன பலப்பரீட்சை நடாத்தின. 

இதில் இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு கழகம் பெற்றது. 

இப்போட்டியில் 15 அணிகள் மோதியமை குறிப்பிடத்தக்கது. 

இதன் போது போட்டியின் சிறப்பான ( Passer)க்கான விருது ஏசியன் விளையாட்டு கழகத்தின் பிரபாத் அவர்களுக்கும் சிறப்பான ஆட்ட நாயகன் விருது குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் வீரர் தசுன் அவர்களுக்கும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வு ஏசியன் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு சி.விஜயகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. 

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக குருக்கள்மடம் இராணுவ நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் சிறப்பு அதிதிகளாக விளையாட்டு உத்தியோகத்தர் சி. அருளானந்தம் போன்ற அதிகாரிகள் , மதகுரு போன்ற முக்கியஸ்தர்கள் மற்றும் ஏசியன் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் என  பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments