Advertisement

Responsive Advertisement

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு



02-12-2022


2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. Www.admission.ugc.ac.lk


 என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்தார்.


மேலும்


வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள்

பல்கலைக்கழகங்களுக்கான பதிவுகள் தொடர்பான அறிவித்தல் இன்னும் இரண்டு வாரத்தில்

02-12-2022


2021 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள்(இசெட் ஸ்கோர்) வெளியிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கான பதிவுகள் தொடர்பில் மாணவர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த அறிவிப்பு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஊடாக வெளியிடப்படவுள்ளது.

இதனையடுத்து மாணவர்களின் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த முறை பல்கலைக்கழகங்களுக்கு 44 ஆயிரம் பேர் உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments