பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர், மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலபொடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த நவம்பர் 25ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பாணந்துறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் இது தொடர்பபிலல் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய ஆசிரியையை நேற்று (01) கைது செய்து, மொரகஹஹேன பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மில்லவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவராவார்.
சந்தேகநபர் நேற்றையதினம் (01) ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு டிசம்பவர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 comments: