01-12-2022
DECEMBER மாதம் நடைபெற உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் முக்கியமான இரு மாற்றங்களை கல்வி அமைச்சு ஏற்படுத்தியுள்ளது..
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணையில் உள்ளவாறு இம்முறை பகுதி 1 வினா பத்திரத்தை இரண்டாவதாகவும் பகுதி 2 வினாப்பத்திரத்தை முதலாவதாகவும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் ஊடக வெளியீட்டின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தொடர்பான அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
1. வினாத்தாள் வழங்கும் நேர அட்டவணை மாற்றம்
2.மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரு வருடங்களின் போது, விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்ட போதிலும் , இம்முறை பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகளின் வருகை பதிவு ஆவணத்தின் மூலம் பரீட்சைக்கு சமூகமளித்தமை உறுதிப்படுத்தப்படும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
0 comments: