09-09-2022.*,
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில்
ஒரு புதிய அம்சமாக, வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கான பதிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) இன்று அறிவித்துள்ளது.
ஜெனரேட்டர்கள், புல் வெட்டும் கருவிகள் மற்றும் பிற உபகரணங்கள் போன்ற வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ. ஆர்
மூலம் எரிபொருளை விநியோகிக்கும் திறன் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யும் முறைகள்
தொடர்பான விபரங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறியுள்ளது.
0 Comments