தேவையான அளவு நிலக்கரி கிடைத்தால், மின் உற்பத்திக்கு தேவையான நீர் நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளது எனவே டிசம்பர் வரை மின்வெட்டு தேவையில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளதுடன் தற்போது மின்சாரத் தேவை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னோம், ஆனால் மின்வெட்டு அமுல் படுத்தப்படவில்லை. கடந்த 03ஆம் திகதி முதல் இன்று வரை மின்வெட்டு இல்லை. அதற்குக் காரணம் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது.
தற்போது தேவையான அளவை விட அதிகமாக மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. எனவே, அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள், நிலக்கரி போதுமான அளவு கிடைக்கப்பெறுமானால் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்காது என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேவையான அளவு தண்ணீரும், நிலக்கரியும் இருந்தால், வரும் டிசம்பர் வரை மின்சாரம் துண்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் தற்போதைய நிலக்கரி கையிருப்பு ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமானது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிலக்கரி கிடைக்காவிட்டால் தினமும் 08 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
0 comments: