Advertisement

Responsive Advertisement

பேரிடரில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு சிறிலங்கா நன்கொடை!

 


பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியது.

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்ற நிலையில், இலங்கையும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளது.

பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக தேயிலையை நன்கொடையாக அளித்து உள்ளது.

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த இலங்கை

பேரிடரில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு சிறிலங்கா நன்கொடை! | Sri Lanka Donates Flood Affected Pakistan

2022 செப்டம்பர் 05 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தேயிலையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பரூக் புர்கியிடம் கையளித்தார்.

மேலும், வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அலி சப்ரி இரங்கல் தெரிவித்ததோடு பாகிஸ்தானுக்கான இலங்கை அரசாங்கத்தினதும், இலங்கை மக்களினதும் ஆதரவையும் ஒற்றுமையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், இலங்கையின் இந்த மனிதாபிமான நடவடிக்கை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Gallery

Post a Comment

0 Comments