Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இளம் குடும்பப்பெண் தூக்கிட்டு தற்கொலை - கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

 


மண்டூர் ஷமி)

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டு பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்ணை வீதி முனைக்காடு பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான (32) வயதுடைய திருமால் விமலேஸ்வரி என்பவரே தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த பெண் திருமணம் முடித்து கண்வர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இரண்டாம் தடவையாகவும் பிறிதொரு நபரை திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் தனது மகனுடன் ஏற்பட்ட தகறாறின் பின்னர் தனது படுக்கை அறைக்கு சென்றவர் மறுநாள் நித்திரை விட்டு எழும்பாத நிலையில் கணவர் சென்று கதவை திறந்து பார்த்தவேளை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும். குறித்த பெண் மட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத்தொழிச்சாலையில் தொழில்புரிந்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments