Home » » பதிவாளர் நாயகம் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பதிவாளர் நாயகம் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

 


07-09-2022.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் பிரதி நகல்களில் சரிபார்ப்பு காலம் இல்லை என திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆவணங்களுக்கு சரிபார்ப்பு காலம் இல்லை என தெரிவித்த பதிவாளர் நாயகம் திணைக்களம், கல்வி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களங்கள் மற்றும் ஆட்கள் பதிவு திணைக்களங்களுக்கு இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பை வெளியிட்ட திணைக்களம், 06 மாதங்களுக்கு முன்னர் செல்லுபடியாகும் எனச் சான்றளிக்கப்படுவதற்கான நகல் பிரதிகளுக்கான கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திணைக்களத்தால் வழங்கப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் நகல்களில் திருத்தங்களைச் செய்ய மாத்திரமே கோரிக்கை விடுக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |