Advertisement

Responsive Advertisement

மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

 


மண்ணெண்ணெய் விநியோகம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொடரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இன்று (10) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மண்ணெண்ணெய் விலையை திருத்துவது குறித்தும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இரண்டாவது கப்பலும் வரும் 29 ம் திகதி வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், எதிர்வரும் 15 ஆம் தேதி முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய் தயாரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரும் 19 ஆம் திகதி முதல் தொடர்ந்து மண்ணெண்ணெய் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments