Home » » பலத்த காற்றினால் உடைமைகள் சேதம் ! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தையும் தாயும் -மட்டக்களப்பில் சம்பவம்

பலத்த காற்றினால் உடைமைகள் சேதம் ! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தையும் தாயும் -மட்டக்களப்பில் சம்பவம்

 


ரூத் ருத்ரா)

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் தற்போது வீசி வரும் கடும் காற்றினால் வளவினுள் நின்ற மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததினால் வீட்டின் கூரைப் பகுதிகள் சேதமடைந்ததுடன் பொருட்கள் சிலவும் சேதமுற்றுள்ளன.

நூலக வீதியில் வசித்து வரும் ந.ஜெயசக்தி என்பவரது வீடே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை மற்றும் குழந்தையின் தாய் ஆகியோர்கள் காயங்கள் எதுவுமின்றி அதிர்ஸ்ட வசமாக உயிர்தப்பியுள்னர்.

சேதமடைந்த தங்களது வீட்டின் கூரையை திருத்துவதற்கு வசதியற்ற நிலையில் அயலவர்களின் வீட்டில் படுத்துறங்குவதாக கவலை தெரிவித்தனர்.

மாவட்டத்தில் தற்போது வரட்சியுடன் கூடிய கச்சான் எனப்படும் காற்று கடும் வேகத்துடன் வீசுவதனால் வாழைமரங்கள் தென்னை போன்ற பலன் தரும் மரங்கள் முறிவடைவதுடன் வீட்டின் கூரைகளும் தூக்கி வீசப்படும் சம்பவங்கள் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும் .




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |