09-08-2022.*, ,
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று (09) தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 15ஆம் திகதி வௌியிட தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும், கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செயன்முறை பரீட்சைகளில் தோற்றுவதற்கான திகதி பிற்போடப்பட்டமையால், பெறுபேறுகளை இறுதி செய்வது தாமதமாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த வாரமளவில் செயன்முறை பரீட்சைகள் நிறைவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
0 Comments