Home » » வெற்றிகரமாக முடிவடையும் பேச்சுவார்த்தைகள்! ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

வெற்றிகரமாக முடிவடையும் பேச்சுவார்த்தைகள்! ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

 


சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடையும் தருவாயில் இருப்பதாக பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை இன்று வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணிலின் விசேட அறிவிப்பு 

மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. அதன் பின்னர் இரண்டு மாதங்களில் மின்துண்டிப்பு 3 மணித்தியாலமாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடும் தீர்க்கப்பட்டது.

நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களில் பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எரிபொருள் விநியோகம்

ஜூலை மாதம் எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலமாக இருக்கும் என நான் முன்னதாக தெரிவித்த நிலையில், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஜூலை 21 முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், நாட்டிலும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரமே காரணம் 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம்.

பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும்", என ரணில் விசேட அறிவிப்பில் குறிப்பிட்டார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |