பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பு நாளை (19) வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
ரணிலின் பதவியை இரத்து செய்யுமாறு மனு
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்ற தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவின் அடிப்படை உண்மைகளை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
0 Comments