பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை தீவிர போரட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இன்றும் (18) நாளையும் (19) பொதுமக்கள் தமது பிரதேசங்களில் போராட்டங்களை நடத்துமாறு IUSF ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
🔻ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், போராட்டத்தினை வெற்றியுடன் நிறைவு செய்ய முடியுமெனவும், “முழு நாடும் ஒன்றிணைந்து தேசத்தை போராட்ட களமாக மாற்றியதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எம்மால் பதவியில் இருந்து விலகச் செய்ய முடிந்தது” என அவர் சுட்டிக்காட்டினார்.
பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நாளை (19) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை IUSF முன்னெடுக்கவுள்ளது.
0 comments: