ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது வான் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவுக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை விமானபடை இன்று மறுத்துள்ளது.
இலங்கை காவல்துறையினரை அரசியலில் இருந்து விலக்குவதற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் என்று கூறிக்கொள்ளும் முன்னாள் காவல்துறை அதிகாரி, அஜித் தர்மபால வெளியிட்ட காணொளியில் ஜனாதிபதி வான் படைத் தளபதிக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த செய்திகளில் உண்மையில்லை என வான்படையின் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments