Advertisement

Responsive Advertisement

மாணவர்கள் உட்பட இலங்கையர்களுக்கு ஏற்பட்ட அவலம்..!! ஆய்வில் புதிய தகவல்



பாடசாலை மாணவர்களுக்கு மந்தப் போசணை

பாடசாலை மாணவர்களில் 5 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் பத்தில் இருவருக்கு மந்தப் போசணை உள்ளதாக இலங்கை போசணை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் உட்பட இலங்கையர்களுக்கு ஏற்பட்ட அவலம்..!! ஆய்வில் புதிய தகவல்

ஊட்டச்சத்து போதுமானதாக இல்லை

கொரோனா பரவலைத் தொடர்ந்து எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத்தட்டுப்பாடு தொடர்பில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டு மக்கள் தற்போது கொள்வனவு செய்யும் உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து போதுமானதாக இல்லை எனவும் விசேட வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments