Home » » நாளை முதல் ஆரம்பமாகும் பாடசாலைகள்! உருவாகிய புதிய சிக்கல்

நாளை முதல் ஆரம்பமாகும் பாடசாலைகள்! உருவாகிய புதிய சிக்கல்

 


அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

போக்குவரத்து சேவையில் பிரச்சினை

நாளை முதல் ஆரம்பமாகும் பாடசாலைகள்! உருவாகிய புதிய சிக்கல்

நாளை முதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 18,000 தனியார் பேருந்துகளில் 6,000 பேருந்துகள் மாத்திரமே நாளைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

எனினும் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை முதல் ஆரம்பமாகும் பாடசாலைகள்! உருவாகிய புதிய சிக்கல்

பாடதிட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை


இதற்கமைய நாளை முதல் பாடதிட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு சகல பாடசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |