Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

“ஐந்து நாட்களுக்கும் பாடசாலைக்கு வர முடியாது” - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

 


நாட்டின் தற்போதைய சூழ்நலையில், பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.


நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் இதை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

நாம் இது தொடர்பாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம்.

அக்கடிதத்தில், தற்போதைய நெருக்கடியில் ஆசிரியர்கள் ஐந்து நாட்களும் பயணம் செய்து கற்பித்தல் பணியில் ஈடுபடுவது முடியாத காரியம். நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தபடியே உள்ளன.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்வதென்பது உழைப்பின் முழுத் தொகையையும்
பயணத்துக்கு செலவழிக்க வேண்டியுள்ளது.

ஆகவே, ஆசிரியர்களின் போக்குவரத்து செலவீனத்தில் அரைப்பங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மற்றைய திணைக்களங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு
ஒத்ததாக பாடசாலைகளை இயக்குவதே சிறந்த வழியாகும் என்றார்.

Post a Comment

0 Comments