பிரதமர் மகிந்தவுக்கு ஆதரவாக இன்று கொழும்புக்கு வருகைதந்து காலிமுகத்திடலுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பல பகுதிகளில் மகிந்தவின் ஆதரவாளர்கள் பயணித்த பேருந்துகளையும் சேதம் விளைவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை பேர வாவிக்குள் தள்ளிவிட்ட சம்பவமொன்று கங்காராம பகுதியில் பதிவாகியுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வந்த அமைதி வழியான போராட்டம் இன்று குழுப்பப்பட்டது.
பிரமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் சென்ற குழுவினர் போராட்டக் களத்தில் உள்ள கூடாரங்களை எரித்தும் அடித்து உடைத்தும் அராஜக செயலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக போராட்டக் களம் யுத்தப் பூமியாக மாறியதை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்று தெரிவித்து வந்தவர்களை வாவிக்குள் பொதுமக்கள் தள்ளியுள்ளனர்.
0 comments: