Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இது ராஜபக்சவினரின் முடிவு:சனத் ஜயசூரிய

 


அப்பாவி போராட்டகாரர்கள் மீது பட்டப்பகலில் இப்படியான வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என தான் ஒரு போதும் நினைக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகல துறை ஆட்டகாரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள், அமைதியாக போராட்டம் நடத்தி வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸார் இருப்பது ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க அல்ல எனவும் நாட்டின் பொதுமக்களை பாதுகாக்கவே இருக்கின்றனர் என்பதை பொலிஸார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் சனத் ஜயசூரிய கூறியுள்ளார்.

அத்துடன் இது ராஜபக்சவினரின் முடிவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments