Home » » மீண்டும் அதிகரிக்கப்பட்ட மற்றுமொரு பொருளின் விலை!

மீண்டும் அதிகரிக்கப்பட்ட மற்றுமொரு பொருளின் விலை!

 


இலங்கையில் ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை மீண்டும் 85,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த மாதம் 10 ஆம் திகதி இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாவாக காணப்பட்ட ஒரு தொன் இரும்பு கம்பியின் புதிய விலை மூன்று லட்சத்து 39 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய முன்னர் 1,040 ரூபாவுக்கு விற்பனை செற்றப்பட்ட 10 மில்லிமீற்றர் கம்பியின் புதிய விலை 1,268 ரூபாவாக அதிகரித்தது.

ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12 மில்லிமீற்றர் கம்பி தற்போது ஆயிரத்து 887 ரூபாவுக்கும் 2 ஆயிரத்து 725 ரூபாவுக்கு விற்கப்பட்ட 16 மில்லிமீற்றர் கம்பி மூவாயிரத்து 200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இவ்வாறு இரும்பு கம்பியின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிகின்றன.

அத்தோடு இரும்பு கம்பிகளுக்கான தட்டுப்பாடும் தற்போது ஏற்பட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |