Advertisement

Responsive Advertisement

அவுஸ்திரேலிய நகரங்களில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இலங்கையர்கள்

 


அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் வசிக்கும் இலங்கையர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்துக்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பேர்ன், கென்பரா, அடிலெய்ட் போன்ற நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

மெல்பேர்னில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் கோட்டா வீட்டுக்கு போ என்ற கோஷத்தை எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்சார துண்டிப்பு போன்றவற்றினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக சுயமான திரண்டு போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இலங்கை மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments