ஏறாவூர் குடியிருப்புப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பட்டா ரக வாகனத்தில் மதுபானங்களை எடுத்துச் சென்ற ஒருவரை, நேற்று (02) மாலை 6.30 மணியளவில் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமயைக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.எஸ். சந்திரகுமார தலைமையிலான பொலிஸ் குழுவினர், கோட்டமுனை பாலத்துக்கு அருகில் குறித்த பட்டா ரக வாகனத்தை சோதனையிட்டனர்.
இதன்போது கால்போத்தல் கொண்ட மதுபான போத்தல்கள் 250 மீட்டதுடன், வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு, பட்டா ரக வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
0 comments: