நாடாளுமன்றத்தில் இன்று பகல் நேர போசனத்துக்காக நேரம் ஒதுக்குவது தொடர்பில் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
பகல் போசனத்துக்காக நேரம் தேவையில்லை என்றும் நாடாளுமன்ற அமர்வை தொடரவேண்டும் என்றும் எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் அரசாங்க கட்சியினர் இதற்கு உடன்படவில்லை.
இதன்போது பகல் போசனத்தை தவிர்த்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்திச் செல்வது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரினர்
எனினும் நாடாளுமன்றில் அரசாங்கக் கட்சியினர் குறைவாக இருந்தமையால், அவை தலைவர் தினேஸ் குணவர்த்தன அதற்கு உடன்படவில்லை.
இந்தநிலையில் அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல, அரசாங்க கட்சியினரின் கருத்துக்கு புறம்பாக தமது கருத்தை வெளியிட்டார்.
நாடாளுமன்ற அமர்வுகளை பகல் போசனத்துக்கு இடைநிறுத்தாமல் தொடரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அரசாங்க கட்சியினருக்கு, எதிர்கட்சியின் கோரிக்கைக்கு இணங்கி பகல் போசன இடைவேளை இன்றி அமர்வுகளை நடத்தி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதன்போது தினேஸ் குணவர்த்தனவும் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு இணக்கம் வெளியிட்டார்.
0 comments: