Home » » மீண்டும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் கட்டணம்- தொடர் நெருக்கடிக்குள் மக்கள்!

மீண்டும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் கட்டணம்- தொடர் நெருக்கடிக்குள் மக்கள்!

 


நாட்டில் பேருந்து கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 20 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக அதிகரிப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |