நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை தொடக்கம் அவிசாவளை கொழும்பு பிரதான வீதி உக்குவத்தை சந்தியில் தனியார் பஸ் சாரதிகள் பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் அவிசாவளை - கொழும்பு விதியில் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பொதுமக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
அவிசாவளையில் இருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் சகல தனியார் பஸ்களும் சேவையில் ஈடுப்படுத்தப்படாமல் தனியார் பஸ் சாரதிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டத்துடன் பிரதான பாதையை மறித்தும் அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்புக்குரலை எழுப்பினர்.
அதேவேளை அவிசாவளை இரத்தினப்புரி பிரதான வீதியை அவிசாவளை தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக தனியார் பஸ் ஒன்றை பாதையின் குறுக்கேயும் நகர முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனங்களை பாதை நடுவே தரித்து வைத்தும் போக்குவரத்தை தடைச்செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அத்துடன் பிரதான பாதையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டுள்ள அரச பஸ்களையும் சேவையில் ஈடுபடுப்படவிடாது தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
இதனால் தனியார் பஸ் சாரதிகளுக்கும் அரச பஸ் சாரதிகளும் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டு பதற்றநிலை உருவானது.
பிரதான வீதியின் ஊடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொதுமக்கள் பெரும் சிக்கல்களை சந்தித்தனர். அத்தோடு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததோடு கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
0 Comments