( தாரிக் ஹஸன்)
எரி வாயு பெறுவதற்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்த ஆத்திரத்தில் திருகோணமலை தபால் அலுவலகத்திற்கு முன்னால் பிரதான வீதியை மறித்து தங்களுக்கு எரிவாயு வழங்குமாறு கோரி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இன்று காலை 6 மணி முதல் எரிவாயு வழங்கப்படும் என கடை உரிமையாளர் கூறியதை அடுத்து மக்கள் நீண்ட வரிசையில் நின்றதாகவும் மாலை வரை எரிவாயு கிடைக்கவில்லை எனவும் மக்கள் தெரிவித்தே பிரதான வீதியில் கேஸ் சிலிண்டர்களை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்பட்டது.
0 Comments