Advertisement

Responsive Advertisement

மாலைதீவிலிருந்து இலங்கையை வந்தடைந்துள்ள எரிவாயு கப்பல்

 


மாலைதீவில் இருந்து 3900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்று இரவு 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய,தற்போது நாளொன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை,எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் உள்ள வரிசைகள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முற்றாக முடிவடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments