கொழும்பு காலிமுகத்திடலில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடியுள்ளதாக இந்திய ஊடகமான NDTV தனது நேரலையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலையேற்றம் காரணமாக மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றையதினம் பாரியளவில் கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் அரச தலைவரை பதவி விலகக்கோரி ஒன்று கூடி தமது எதிர்பபை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments