Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தவணை பரீட்சைகள் மூன்று பிரிவுகளின் கீழ் நடத்த முடிவு


மேல் மாகாணத்தில் பாடசாலை தவணை பரீட்சைகளை மூன்று பிரிவுகளின் கீழ் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் தரம் 11 க்கு மாகாண மட்டத்திலும், தரம் 9 மற்றும் 10 க்கு வலய மட்டத்திலும், தரம் 6, 7 மற்றும் 8 க்கு பாடசாலை மட்டத்திலும் தவணைப் பரீட்சைகள் நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏனைய மாகாணங்களில் தவணைப் பரீட்சைகள் தடையின்றி மாகாண மட்டத்தில் நடைபெறும் என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பரீட்சைக்குத் தேவையான தாள்களைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்தியக் கடன் வசதியின் கீழ் கோரிக்கையை முன்வைக்க அரச தலைவரின் செயலாளர் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

Post a Comment

0 Comments